கிருஷ்ணகிரி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 கிலோ வெடி மருந்துகள், 580 டெட்டனேட்டர் வெடி குச்சிகள் மற்றும் 30 டெட்டனேட்டர் வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். செம்படமுத்தூர் கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ராஜேஷ் மற்றும் திருப்பதி ஆகியோர் வீடுகளில் இருந்து இந்த வெடி மருந்துகள் சிக்கியது. மேலும் தலைமறைவாக உள்ள பன்னீர் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.