வீட்டைச் சுற்றி, பிளாஸ்டிக் பைப் வழியாக சென்ற ஏழடி நீளமுள்ள பாம்பு பிடிபட்டது. ஈரோடு அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பாம்பு நடமாட்டம் இருப்பதைக் கண்டு பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்து, பாம்பு பிடி வீரர் யுவராஜ் பார்த்த போது, 7 அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை பாம்பு, பிளாஸ்டிக் பைப் வழியாக சென்றுள்ளது. பிளாஸ்டிக் வழியே சென்ற பாம்பு, அதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தது. இந்நிலையில் பாம்பு பிடி வீரர் அதை லாவகமாக பிடித்து, அதற்கு தண்ணீர் கொடுத்து, தெளிய வைத்தார். பின்னர், அந்த பாம்பு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.