சென்னை அருகே வண்டலூரில் குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஸ்டாலின் தெருவில் வசித்து வரும் அனிஷ் என்பவரின் வீட்டில், பயன்படுத்தப்படாமல் இருந்த நாய் கூண்டுக்குள் சென்று பதுங்கி இருந்த மலைப்பாம்பை பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.