கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 360 செண்டிமீட்டர் ஆழத்தில், 7 செண்டிமீட்டர் நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது போக, மீதமுள்ள ஒரு பகுதி என கூறப்படுகிறது.