திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 6 ஆயிரத்து 950 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையின் முழு கொள்ளளவான 90 அடியில் 88 அடியை தாண்டியுள்ளதால் அணையின் பாதுகாப்புக் கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதை அடுத்து கல்லாபுரம், குமரலிங்கம், ருத்ராபாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : மும்மதத்தினர் முன்னிலையில் மதநல்லிணக்க திருமணம்..!