தியாகி இம்மானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், கயல்விழி மற்றும் எம்.எல்.ஏக்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.