சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந் வீரமுத்து 16 வயது சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே பெற்றோர்கள் அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.