கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே CBSE பள்ளியில் அனுமதியின்றி இயங்கி வந்த ஆறு வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வடசேமபாளையம் கிராமத்தில் உள்ள சக்ர வித்யாலையா CBSE பள்ளியின் வாகனங்களை மண்டல போக்குவரத்து அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்.அப்போது அங்கிருந்த ஆறு வாகனங்கள் பர்மிட், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இன்றி இயங்கியது தெரியவந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சங்கராபுரம் காவல் நிலையத்தில் வாகனங்களை ஒப்படைத்தனர்.விசாரணையில் சில வாகனங்கள் இருசக்கர வாகன எண்ணை பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.