கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே 6 லட்ச ரூபாய் மதிப்பிலான 1 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர். நயினார்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குட்காவை விற்பனை செய்த பாலாஜி, கிருஷ்ணா, இனையத்துல்லா, அசோக்குமார், பிரபாகரன், சின்னதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.