திருவாரூர் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நால்வர் என மொத்தம் 6 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 46 பேர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.