கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மகளத்தூர் கிராமத்தில் வசிக்கும் முரளி சாமியார் என்பவருக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் கடனை திருப்பி செலுத்த முடியாததால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், தீர்த்ததில் விஷத்தை கலந்து தனது குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளார். இதில் மயக்கம் அடைந்தவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மா. செந்தில்குமார், அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.