குமரி மாவட்டம் கோழிக்கோட்டு பொத்தை அருகே வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 6 மாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. கோழிக்கோட்டு பொத்தை பகுதியை சேர்ந்த விவசாயி தானப்பன், மேய்ச்சலுக்காக மாடுகளை வயல் வெளியில் விட்டபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாடுகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவசாயி உரிய இழப்பீடு தந்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.