கோவை மாவட்டம் கொல்லபட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், பல்லி விழுந்த மதிய உணவை உட்கொண்ட 6 குழந்தைகள், உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவு சமைத்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி பணியாளர்கள், அந்த உணவை குழந்தைகள் சாப்பிட விடாமல் தடுக்க சென்றனர். அதற்குள் குழந்தைகள் சிறிதளவு உணவு உட்கொண்டதாகவும், வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.அங்கன்வாடி பணியாளர்களின் அலட்சியபோக்கே இதற்கு காரணம் என்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.