விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கிராமத்தில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டிற்கான மின் இணைப்புக்காக நடப்பட்டிருந்த கம்பத்தில் ஷாக் அடிப்பதாக பல முறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இதனிடையே, மின்சாரம் பாய்ந்த கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுமி சம்யுக்தாவை மின்சாரம் தாக்கியது.