தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகளில் இருந்து உபரி நீரானது தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடந்த மூன்று நாட்களாக 50 ஆயிரம் அடியாக இருந்த நிலையில் தற்போது 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடையானது 12ஆவது நாளாக நீடித்துள்ளது.