தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரே வாரத்தில் ரூ.5 ஆயிரத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. இதன்படி, இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,500க்கும், ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனை ஆகிறது. தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்தது. கடந்த 17ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,000த்தை தாண்டி வரலாற்றில், புதிய உச்சம் தொட்டது. தொடர்ந்து, காலை, மாலை என ஏற்ற, இறக்கத்தை சந்தித்தது. சென்னையில் நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை இரு முறை சரிந்தது. நேற்று அக்டோபர் 22ஆம் தேதி மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.விலை குறைவு ஏன்?கடந்த வாரத்தில் மட்டும், 12 ஆண்டுகளில் இல்லாத வகையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, சுமாராக 8.10 சதவீதம் குறைந்தது. இன்னும் ஒரு சில வாரங்களில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.1 லட்சத்தை தாண்டும் என்று கூறப்பட்ட நிலையில், அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் மதிப்பு உயர தொடங்கியதால், தங்கத்தின் விலையில் இப்போது சரிவு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டில் இருந்து பங்குச்சந்தைக்கு, படிப்படியாக மாறத் தொடங்கி உள்ளனர். இன்றைய தங்கத்தின் விலைஇன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,500க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் - ரூ.11,500 (-40)ஒரு சவரன் - ரூ.92,000 (-320)கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு சவரனுக்கு ரூ.5,600 குறைந்துள்ளது.இன்றைய வெள்ளி விலைவெள்ளி விலை நேற்று அதிரடியாக ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து 1 கிராம் ரூ.175க்கு விற்பனை ஆனது. இந்நிலையில், இன்றும் ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.174க்கும், கிலோ ரூ.1,74,000க்கும் விற்பனை ஆகிறது. எட்டாத உயரத்தில் இருந்தாலும், தங்கத்தின் விலை மேலும் உயராமல் இருந்தால் சரி தான் என, சாமானியர்கள் ஏக்கம் கொண்டுள்ளனர்.