தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னமனூர் பகுதியில் வசிக்கும் புனிதா-ஜெகதீசன் தம்பதி, அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நிலையில் இருவரும் பணிக்குச் சென்றபோது, மர்மநபர் வீட்டில் புகுந்ததாக தெரிகிறது. மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்க சுவற்றில் ஏறி குதித்து பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகக் சந்தேகிக்கப்படுவதால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.