அதிமுக 54ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க வரவேற்றனர். அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தியதுடன், "அண்ணா வழி திராவிடம் வாழ்வியலுக்கான அரசியல்" என்ற மலரை வெளியிட்டு, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். எம்.ஜி.ஆர். சிலைக்கு செங்கோட்டையன் மரியாதைஈரோடு: அதிமுகவின் 54ஆம் ஆண்டு துவக்க நாளையொட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தினார். அவரது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்திய செங்கோட்டையன், கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.