சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான 533 சவரன் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை மாற்றி வைத்து மோசடியில் ஈடுபட்ட கல்லல் ICICI வங்கி கிளை மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்த போது கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வைக்கப்பட்டிருந்த நகைகளின் கவர் பிரிக்கப்பட்டு, தங்க நகைகளுக்கு பதிலாக அந்த நகைகளை போலவே கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், வங்கி வங்கி மேலாளர் விக்னேஷ், உதவி மேலாளர் ராஜாத்தி, மோசடிக்கு உதவிய ரமேஷ், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.