பெருந்தலைவர் காமராஜரின் 50 வது நினைவு தினத்தையொட்டி, விருதுநகரில் அவர் படித்த பள்ளியில், அவரது முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ள K.V.S மேல்நிலை பள்ளியில் காமராஜர் கல்வி பயின்றார். இந்நிலையில் அவரை நினைவுப்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில், முகப்பு வாயிலில் காமராஜரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இதனை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்து, காமராஜரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.