மதுரை வாடிப்பட்டி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் மூட்டை நெல், மழையில் நனைந்து சேதமாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆண்டிப்பட்டி பகுதியில் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட நெல், அங்குள்ள அரசு கொள்முதல் நிலையத்தின் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தீபாவளி முடிந்துதான் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறிவிட்டதால், தற்போது பெய்து வரும் பருவமழையில் நெல் நனைந்து முளைத்து சேதமாகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.