நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற மீனவர் சங்க தொடக்க விழாவில் 500 கிலோ மீன் வருவல் மற்றும் மீன் குழம்புடன் அசைவு உணவு விருந்து வைக்கப்பட்டது. கூட்டத்தில், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் காவிரி நீர் மாசுபடுவதை அரசு தடுக்க வேண்டும் எனவும், மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கியை விரைந்து தொடங்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.