திருப்பத்தூர் மாவட்டம் சந்திர நகரில் ரயில்வே துறையின் 500 டிராப் பாக்ஸ்கள் தீயில் கொளுந்துவிட்டு எரிந்து நாசமானது. கேபிளை தண்டவாளம் அருகே புதைக்கப்படும் போது அதனை பாதுகாப்பதற்காக வைக்கப்படும் டிராப் பாக்ஸ்களை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதாககூறப்படுகிறது. இதில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராப் பாக்ஸ்கள் எரிந்தன.