அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம், மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கச்சிப்பெருமாள் பகுதியை சேர்ந்த வசந்தா என்பவர் வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். மாலை மீண்டும் வீட்டிற்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த வசந்தா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த உடையார்பாளையம் போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.