டீக்கடைக்கு சென்று கொண்டிருந்த ரவுடியை வழிமறித்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் ரவுடியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம். காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளிகள் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம். 5 வருடங்களாக நீடித்த முன்பகை கொலையில் முடிந்தது விசாரணையில் அம்பலம். ரவுடியை வெட்டிக் கொன்ற கும்பல் யார்? இரு தரப்புக்கும் இடையே 5 வருடங்களாக நீடித்த பிரச்னை என்ன?திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில உள்ள டீக்கடைக்கு தன்னோட பைக்குல போய்ருக்காரு இளைஞர் லோகேஷ். அப்ப எதிர்முனையில ஆட்டோவுல வந்த கும்பல் ஒன்னு, லோகேஷ வழிமறிச்சு பயங்கரமா வாக்குவாதம் பண்ணிருக்காங்க. அடுத்து மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்த அந்த கும்பல் லோகேஷ கை, கால், முகம்ன்னு சரமாரியா வெட்டிக் கொன்னுட்டு, தப்பிச்சு போய்ட்டாங்க. இதபாத்த அங்கிருந்த மக்கள் எல்லாரும் பதறியடிச்சுட்டு ஓட்டம் பிடிச்சுருக்காங்க. அப்ப அங்கிருந்த ஒருத்தரு நடந்த சம்பவத்த பத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணி தகவல சொன்னாரு.உடனே, ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. இந்த தகவல கேட்டு ஓடி வந்த லோகேஷ் சொந்தக்காரங்க, அவரோட சடலத்த பாத்து கத்திக் கதறி அழுதுருக்காங்க. லோகேஷ கொன்னது யாரு? அவருக்கு யார் கூடயாவது முன்பகை இருக்கா? உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கான்னு சொந்தக்காரங்க கிட்ட கேட்ருக்காங்க போலீஸ்.ஆனா, சொந்தக்காரங்க கிட்ட இருந்து எந்த ஒரு துப்பும் கிடைக்கல. இதனால கொலையாளிகள் யாருன்னு தெரிஞ்சுக்க போலீஸ் அங்குள்ள சிசிடிவி காட்சிகள எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. இதுக்கிடையில வழக்கறிஞர் படையோட கமல்ராஜ், ஆனந்தன், தீபக்ன்னு மூணு இளைஞர்கள் திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷன்ல சரணடைஞ்சு, சார் நாங்க தான் லோகேஷ கொலை செஞ்சோம்ன்னு வாக்குமூலம் அளிச்சுருக்காங்க. உடனே அவங்கள கஸ்டடியில எடுத்த போலீஸ் லோகேஷ் கொலை செய்யப்பட்டதுக்கான காரணம் குறித்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க. சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதிய சேந்த லோகேஷ் எந்த ஒரு வேலை வெட்டிக்கும் போகாம மதுபோதையில அக்கம் பக்கத்துல உள்ளவங்க கிட்ட பிரச்னை பண்ணிக்கிட்டு இருந்துருக்காரு. இவரு மேல கொலை முயற்சி, அடிதடின்னு பல கேஸ் இருக்குதுன்னு கூறப்படுது.இவருக்கும் அதே பகுதிய சேந்த கமல்ராஜ்-ங்குற நபருக்கும் ஏரியாவுல யாரு பெரிய ரவுடி-ங்குற மோதல் இருந்துருக்கு. கமல்ராஜ் மேலயும் அடிதடி, கொலை முயற்சின்னு, நிறைய கேஸ் இருக்குதுன்னு கூறப்படுது. ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கமல்ராஜ் ரோட்ல நடந்து போய்ட்டு இருந்துருக்காரு. இதபாத்த லோகேஷ் தன்னோட நண்பர்களோட சேந்து கமல்ராஜ முதுகுல கத்தியால ஓங்கி குத்திட்டு தப்பிச்சு போய்ருக்காரு. இந்த கேஸ்ல லோகேஷ அரெஸ்ட் பண்ணி போலீசார் புழல் சிறையில அடைச்சுருக்காங்க. அதே மாதிரி அடுத்த கொஞ்சம் நாட்கள்லையே கமல்ராஜும் வேற ஒரு கேஸ்ல புழல் சிறையில அடைக்கப்பட்டிருக்காரு. அப்ப சிறைக்குள்ள வச்சும் ரெண்டு பேருக்கும் இடையில அடிக்கடி மோதல் ஏற்பட்டிருக்கு.அப்ப ஜெயில்ல இருந்துவெளிய வந்த உடனே முதல்ல உன்னதான் போட்டுத் தள்ளுவேன்னு கமல்ராஜ மிரட்டிருக்காரு லோகேஷ். அதுக்கு கமல்ராஜ் உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு சவால் விட்ருக்காரு. இதுக்கிடையில ரெண்டு பேரும் அடுத்தடுத்து சிறையில இருந்து வெளியவந்துருக்காங்க. சிறையில இருந்து வெளிய வந்த லோகேஷ் தலைமறைவா இருந்தப்படியே கமல்ராஜ்க்கு ஸ்கெட்ச் போட்ருக்காரு. அவன் என்ன கொலை செய்றதுக்கு முன்னாடி, நம்ம லோகேஷ கொலை செஞ்சுருனும்ன்னு தன்னோட நண்பர்களோட சேந்து முடிவு பண்ணிருக்காரு கமல்ராஜ். அதுபடி லோகேஷோட நடமாட்டத்தையும் தீவிரமா கண்காணிச்சுட்டு இருந்துருக்காரு கமல்ராஜ். சம்பவத்தன்னைக்கு லோகோஷ் தன்னோட அப்பா வேலை பாக்குற கடைக்கு போய்ட்டு இருந்துருக்காரு. அப்ப அங்க வந்த கும்பல், அவர வழிமறிச்சு அரிவாளால சரமாரியா வெட்டிக் கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. இதனால அந்த இடமே பரபரப்பா இருந்துருக்கு.இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், அங்கருந்த பொதுமக்கள அப்புறப்படுத்திருக்காங்க. அடுத்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களையும் காவல் ஆய்வாளர் ரஜினிஷ் தடுத்ததா கூறப்படுது. அதுக்கப்புறம் போலீசார் கொலையாளிகள தீவிரமா தேடிட்டு இருந்த நேரத்துல கமல்ராஜ், ஆன்ந்தன், தீபக்ன்னு மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷன்ல சரணடைஞ்சுட்டாங்க.அதுக்கப்புறம் அந்த மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணி போலீசார் சிறையில அடைச்சுட்டாங்க.