சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. கோகுல் என்பவர் வண்டலூரில் இருந்து கிண்டி நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மாடு குறுக்கே வந்ததால் பதறி பிரேக்கை பிடித்த நிலையில் பின்னால் வந்த வாகனங்களும் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.