திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. பேரூராட்சி அலுவலகம் அருகே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குவிந்து கிடக்கும் 5 டன் குப்பை குறித்து பல முறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.