கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரை கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் வெடித்த மோதலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் பலத்த காயமடைந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழந்ததை தொடர்ந்து, பெரியமேடு போலீஸார் வழக்குப் பதிந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் என 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.