திருப்பத்தூர்... வழக்கம் போல் மாட்டு கொட்டகைக்கு சென்ற மூதாட்டி. இரவு வரை வீடு திரும்பாததால் பதறிப்போன உறவினர்கள். மூதாட்டியை தேடி மாட்டு கொட்டகைக்குள் சென்றபோது அதிர்ச்சி. கை, கால்கள் கட்டப்பட்டு ரத்தக் காயங்களுடன் மூதாட்டி இறந்து கிடந்த கொடூரம். நகைக்காக நடந்த கொடூரமா? குற்றவாளிகள் சிக்கினார்களா? நடந்தது என்ன?திருப்பத்தூர், வாணியம்பாடில உள்ள பெத்தகல்லுப்பள்ளி-ங்குற கிராமத்த சேர்ந்தவங்க 60 வயசான மூதாட்டி பவுனமாள். இவங்களோட கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாடி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துட்டாரு. இவங்களுக்கு ரெண்டு மகன்கள் இருக்காங்க. ரெண்டு பேரும் கல்யாணமாகி வெளியூர்ல செட்டிலாகிட்டாங்க. பெத்தகல்லுப்பள்ளில உள்ள வீட்டுல மூதாட்டி பவுனமாள் மட்டும்தான் வாழ்ந்துட்டு வந்திருக்காங்க. பவுனம்மாளுக்கு 60 வயசு ஆனாலும், வீட்டுல இருக்க மாட்டாங்களாம். நம்மளால முடிஞ்ச வேலைய பாக்கணும்னு நினச்சு தெனமும் மாடு மேய்க்க போய்ருவாங்களாம். இதுக்கு இடையில விவசாயத்தையும் கவனிச்சிட்டு வந்திருக்காங்க. இந்த நிலையில, 5ஆம் காலையில, வழக்கம் போல மாட்டு கொட்டகைக்கு, வீட்டுல இருந்து கிளம்பி போய்ருக்காங்க. எப்பவும் காலையில போய்ட்டு சாயங்காலம் பொழுது சாய்றதுக்குள்ள வீட்டுக்கு வந்திருவாங்க. ஆனா அன்னைக்கு நைட் ஏழு மணிக்கு மேலாகியும் மூதாட்டி பவுனமாள் வீட்டுக்கு வரல. இதனால, அக்கம்பக்கத்துல இருந்த உறவினர்கள் பவுனம்மாளுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிப்போய்ருக்காங்க. அதுக்கப்புறம், பவுனம்மாள் வழக்கமா மாட்டு கொட்டகைக்கு போற இடத்துக்கு தேடிப் போய்ருக்காங்க. ஆனா, அங்க உள்ள விவசாய நிலத்துல அவங்க ரத்த வெள்ளத்துல சடலமா கிடந்தத பாத்து, ஒட்டுமொத்த குடும்பமும் ஆடிப்போய் நின்னுருக்காங்க. யாரோ ஒரு கும்பல், பவுனம்மாளோட கை, கால்கள் கட்டப்பட்டும், கழுத்த துணியால நெரிச்சு கல்லால அடிச்சே கொன்னுருக்குறது தெரியவந்திருக்கு. அதுமட்டுமில்ல, மூதாட்டி பவுனம்மாள் பாக்கவே கொடூரமா இருந்துருக்கு. தகவல் தெரிஞ்சு அங்க வந்த போலீஸ், இறந்து கிடந்த மூதாட்டி சடலத்த கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வைக்கிற வேலையில இறங்குனாங்க. இதுக்கு இடையிலதான், மூதாட்டி பவுனமாள் காதுலயும், கைகளையும் போட்டுருந்த தங்க நகைகள காணும்னு அவங்களோட சொந்தக்காரங்க போலீஸ் கிட்ட சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம்தான், மூதாட்டியோட கை, கால்கள கட்டிப்போட்டு கல்லால அடிச்சு கொன்னுட்டு தங்க நகைகள மர்ம நபர்கள் பறிச்சு போய்ருக்காங்குறத போலீஸ் உறுதிப்படுத்திருக்காங்க.இதுக்கு மத்தியில, கடந்த சில நாட்களுக்கு பவுனம்மாள் மேல அம்பலூர் போலீஸ், மதுபாட்டில்கள் விற்பனை பண்ணதா சொல்லி வழக்கும் பதிவு பண்ணிருக்காங்க. அப்படி இருக்குற நேரத்துல, பவுனம்மாள் கொலை செய்யப்பட்டு இருக்குறது பல சந்தேகங்கள எழுப்பிருக்கு. மூதாட்டி பவுனமாள் அணிஞ்சிருந்த நகை மொத்தம் அஞ்சு பவுன் இருக்குமாம். அந்த அஞ்சு பவுன் நகைக்காக நடந்த கொலையா, இல்ல மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பா வேற யாருடையாவது ஏற்பட்ட பிரச்சனையில நடந்த கொலையா-ங்குறது குற்றவாளிகள பிடிச்சாதான் தெரியும்னு போலீஸ் அதிகாரிகள் சொல்றாங்க. மூதாட்டி பவுனம்மாளோட மாட்டு கொட்டகை இருக்குற இடம் ஆள்நடமாட்டம் இல்லாத ஏரியா. பெருசா ஆள் நடமாட்டம் இருக்காது. இத நல்லா தெரிஞ்சி வச்சிக்கிட்ட யாரோ ஒரு கும்பல்தான், பவுனம்மாள் தனியா இருக்குற நேரம் பாத்து கொடூரமான முறையில கொன்னுருக்காங்க. இதையும் பாருங்கள் - ரயில்வே கிராசிங்கில் நடந்த பயங்கரம்