தஞ்சாவூர் மாவட்டம் மானோஜிப்பட்டியில் ஆயுர்வேத மருத்துவரை கடத்திய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானோஜிப்பட்டியை சேர்ந்த இலக்கியன் என்ற ஆயுர்வேத மருத்துவர் தனது வீட்டை சீரமைக்க தனியார் நிறுவனத்தில் 92 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இந்நிலையில் கடனை பெற உதவியாக இருந்த விஜய் ஆனந்த் கேட்ட 10 லட்ச ரூபாய் கமிஷன் தொகையை மருத்துவர் தர மறுத்ததால் கடத்தப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவரை மீட்டு, அவரை கடத்திய விஜய் ஆனந்த், மணிகண்டன், சந்திர ரூபன், சங்கர், தர்மசீலன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.