சென்னை குன்றத்தூரில் பிரியாணியில் பல்லி இறந்து கிடந்ததை கவனிக்காமல் சாப்பிட்ட 5 பேர் வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்றத்தூரை சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டுநர் ராஜேஷ், அங்குள்ள கடை ஒன்றில் 2 பிரியாணி பார்சல் வாங்கிச் சென்று, தனது தங்கை சுகன்யா, அவரது கணவர் மகேஷ் மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். அப்போது, பிரியாணி சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி ஏற்படவே, கடைக்கு சென்று கேட்டபோது உரிமையாளர் அலட்சியமாக பதிலளித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 14 நாட்களுக்கு கடையை மூடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.