ஈரோட்டில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காருக்குள் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சுந்தரராஜன் சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.