ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பிரப்பன்வலசை பகுதியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, பயணி ஒருவர் வாந்தி எடுத்ததால் ஓட்டுநர் சாலையோரம் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த ராஜேஷ், அவரது மகள்கள் பிரணவிகா, தர்ஷிலாராணி மற்றும் மாமனார் செந்தில் மனோகரன், மாமியார் அங்காள ஈஸ்வரி ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.