Also Watch
Read this
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷமருந்தி தற்கொலை.. காருக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்ட 5 பேர்
5 பேர் தற்கொலை
Updated: Sep 25, 2024 10:32 AM
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே காருக்குள் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது.
திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நமணசமுத்திரம் சி-பிலாக் அருகே நகரசிவமடம் வாசலில் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்த காரில் இருந்து நீண்ட நேரமாக யாரும் வெளியே வராததால், அப்பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்தபோது, 5 பேரின் உடல்கள் காணப்பட்டது.
அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், நமணசமுத்திரம் போலீசார் உடல்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved