சென்னையில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸார் நடத்திய சோதனையில் முகேஷ், கார்த்திக், சூர்யா உள்ளிட்ட பேர் ஐந்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 84 போதை மாத்திரைகள், ஒன்றரை கிலோ கஞ்சா, 2 பட்டன் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.