கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆழியார் கவியருவியில் குளிக்க ஐந்து மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் உற்சாகமாக குளித்தனர். வறட்சி காரணமாக ஐந்து மாதங்களுக்கு முன் அருவிப்பகுதி மூடப்பட்ட நிலையில், சில வாரங்களாக தொடர் மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது நீர்வரத்து சீரானதால், பூஜைகள் செய்த பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.