தஞ்சையில் ஜவுளிக்கடை உள்ளிட்ட அடுத்தடுத்து 3 கடைகளில் மர்மநபர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற நிலையில், அடையாளம் தெரியாமல் இருக்க அங்கு பொருத்துப்பட்டிருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் மர்மநபர்கள் கழட்டி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தெற்கு வீதியில் உள்ள தி நடராஜா சில்க்ஸ் கடையின் மாடி வழியாக வந்த மர்மநபர்கள் கடைக்குள் நுழைந்து அங்கு கள்ளாவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்துள்ளனர். பின்னர், மீண்டும் மாடி வழியாக சென்று அடுத்தடுத்த கே.ஆர். பிரிண்டர்ஸ் மற்றும் சுருதிகா பேன்ஸி கடைகளுக்குள இறங்கிய மர்மநபர்கள், அங்குள்ள கள்ளாவில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.