கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை கடித்ததில் உயிரிழந்த 4 வயது சிறுமியின் குடும்பத்தினரை மக்களவை எம்.பி. ஈஸ்வரசாமி சந்தித்து ஆறுதல் கூறி, அரசு அறிவித்த நிதி உதவியினை வழங்கினார். ஊசிமலை எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடலுக்கு எம்.பி. ஈஸ்வரசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிதியை அவர்களிடம் வழங்கினார். மேலும், மிதமுள்ள 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி காசோலையாக வழங்கப்படும் எனவும் அவர்களிடம் தெரிவித்தார்.