மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்க உள்ள 4-வது ஆசிய அலைசறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிக்கான முதற்கட்ட பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. ஏசியன் சர்ஃபிங் அசோசியேஷன் சார்பில் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், இன்று தொடங்கியுள்ள பயிற்சியில் 50 வீரர்கள் பங்கேற்று பயிற்சி எடுத்தனர்.