ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றில் நடைபெற்ற 4-ஆம் ஆண்டு பாலாறு பெருவிழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீப ஆரத்தியை கண்டுகளித்தனர். முன்னதாக பாலாறு அம்மனுக்கு சிவ மேளதளங்கள் முழங்க தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாலாற்று அம்மனை மனமுருகி வழிபட்டு சென்றனர்.