மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் 4,986 அரியவகை ஆமைகள் கைப்பற்றப்பட்டன. கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளின் உடமைகளை புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை செய்ததில், இரண்டு பெட்டிகளில் 4967 ரெட் ஈர்டு ஸ்லைடர் ஆமைகளும், 19 அல்பினோ ரெட் ஈர்டு ஸ்லைடர் ஆமைகளும் கைபற்றப்பட்டன. மேலும் ஆமைகளை கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர்.