திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தின் போது, செயல் அலுவலர் உட்பட 5 பேரிடம் இருந்து 44 சவரன் தங்க நகைகளும், 18 செல்போன்களும் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பணிக்காக வந்திருந்த குமரி மாவட்ட அறநிலையத்துறை செயல் அலுவலா் கவிதா, திங்கட்கிழமை காலை யாகசாலை அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது, அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. திருச்சியைச் சோ்ந்த மீனாவிடம் 20 சவரன் சங்கிலியையும், தென்காசியை சேர்ந்த செல்லக்குட்டி மற்றும் கோமதி ஆகியோரிடம் 7 மற்றும் 5 பவுன் சங்கிலிகளையும், நெல்லையை சேர்ந்த சண்முகசுந்தரியிடம் இரண்டே கால் பவுன் சங்கிலியையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.