நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரியில் கடத்தப்பட்ட 4,200 கிலோ ஜெலட்டின் குச்சிகள் போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கின. பாறை வெடிப்பு பணிக்காக சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்க கேரளாவுக்கு கடத்தப்பட்ட போது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.