சேலம் மேட்டூர் அருகே மேச்சேரியில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்காவை பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரை கைது செய்தனர். வடமாநிலத்தை சேர்ந்த தேவாரம், தேஜாராம், மேச்சேரியை சேர்ந்த சாமிநாதன் ஆகியோரை கைது செய்த போலீஸார், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும், 3 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும், ஒரு பணம் எண்ணும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.