தொடர் மழை காரணமாக, திருவள்ளூர் அருகே சுமார் 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆரணி ஆறு செல்லும் வாய்க்கால் மற்றும் ஏரி கால்வாய்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து விட்டதால், தூர்வார முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மழைநீர் செல்ல வழியின்றி விவசாய நிலங்கள் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.