ஏற்காடு மலைப்பாதையில் தடுப்புச் சுவரை உடைத்து தனியார் பேருந்து நின்ற நிலையில் அதிர்ஷ்டமாக 40 பயணிகள் உயிர் தப்பினர். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சென்னையில் இருந்து 40 பயணிகள் தனியார் பேருந்தில் வந்தனர். சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் கிளம்பியபோது 14 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு சுவரை தாண்டி நின்றது. அருகில் இருந்த பள்ளத்தில் விழாமல் பேருந்து நின்றதால் பயணிகள் அனைவரும் நூலிழையில் உயிர்பிழைத்தனர்.