காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வேலீயோ என்ற தனியார் தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சங்கம் தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு காரணங்களை கூறி தொடர்ந்து தொழிலாளர்கள் மீது நிர்வாகம் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.