குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் பட்டியலில் உள்ள பிரபல ரவுடிகள் நான்கு பேரை ஆரல்வாய்மொழி போலிஸார் பிடித்து கைது செய்தார்கள். தமிழ்நாடு முழுவதும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் பிணையில் வெளி வந்துள்ள குற்றவாளிகள், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டத்திலும் காவல் துறை ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி காவல் நிலையங்களில் பல்வேறு குற்றச்செயல் வழக்குகளில் தொடர்புடையவர்களும் குமரி மாவட்ட காவல்துறையின் ரவுடி பட்டியலில் உள்ள பிரபல ரவுடிகளான 1 .ஜாண் அனீஸ்ராஜா (செண்பகராமன்புதூர்) 2. அஜித் (27) (பூதப்பாண்டி) 3.அனீஷ் (சீதப்பால்) (26) 4.மகேஷ்குமார் (துவரன்காடு) ஆகிய நான்கு ரவுடிகளை ஆரல்வாய்மொழி போலிஸார் கைது செய்தார்கள்.