கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள தோழர் க்குடிகாடு கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் 65 பேர் மாலை அணிவித்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். அதேபோல சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த பக்தர்களும் பாதயாத்திரை ஆக நடந்து சென்றுள்ளனர். இவர்கள் இன்று காலை 5 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார் ஒன்று பாதையை யாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தோழர்க்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த மலக்குடி(35) விஜயலட்சுமி(40)சசிகலா(47) மற்றும் சேலம் மாவட்டம் கெங்கவண்டியைச் சேர்ந்த சித்ரா(40) ஆகிய 4 பக்தர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தோழர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவர் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் நகர போலீசார் வழக்கு பதிந்து கார் ஓட்டுநர் சென்னை, திரிசூலம், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கௌதம்(24) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் தை தேரோட்டம்