சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காட்டெருது மோதி தக்காளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். அறநூத்து மலை பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் தங்களது நிலத்தில் விளைந்த தக்காளியை விற்பனை செய்வதற்காக வேனில் வாழப்பாடி தினசரி சந்தைக்கு கொண்டு சென்றனர். புழுதி குட்டை அருகே வேன் சென்றபோது சாலையை கடக்க முயன்ற காட்டெருது வேனின் மீது வேகமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.